தற்போது முன்னெடுக்கப்படும் கொரோனா வைரஸ் தடுப்பூசிசெலுத்தும் நடவடிக்கைகளை பாதிக்ககூடிய புதிய கொரோனாவைரஸ் பிறழ்வு ஆபத்தை இலங்கை எதிர்கொள்கின்றது என அரசமருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
டெல்டா வைரசின் மூன்று புதிய பிறழ்வுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன என இராஜாங்க அமைச்சர் நாடாளுமன்றத்தில் அறிவித்துள்ள நிலைiயிலேயே அரசமருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் வைத்தியர் செனால் பெர்ணான்டோ இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
இலங்கை புதிய கொரோனா வைரஸ் பிறழ்வினால் புதிய ஆபத்தையும் ஆபத்தான நிலைiமையையும் எதிர்கொள்கின்றது என அவர் தெரிவித்துள்ளார்.
கோவிட் சமூகத்திற்குள் பரவுவதற்கும், புதிய பிறழ்வை உருவாக்குவதற்கும் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இந்த ஆபத்து காரணமாக அரசாங்கம் முதலில் முன்னிலை பணியாளர்களிற்கும் பொதுமக்களிற்கும்; பூஸ்டர்டோஸ்களை வழங்குவது குறித்து ஆராயவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
கட்டுப்படுத்தமுடியாத நிலையில் வைரஸ் பரவும்போது அது மேலும் மாற்றமடைகின்றது பிறழ்வுகளில் இருந்து புதிய வைரஸ் உருவாகலாம் என அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் தற்போது மூன்று பிறழ்வுகள் உள்ளதாக தெரிவிக்கின்றனர் இது ஆபத்தான நிலைமை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பூஸ்டர்சொட்களை வழங்குவதற்கு 15 மில்லியன் டோஸ்கள் அவசியம் என தெரிவித்துள்ள செனால் பெர்ணான்டோ நாங்கள் பூஸ்டர் சொட்களை வழங்குவது என்றால் முதலில் நாங்கள் அதற்கான காலக்கெடு,தடுப்பூசி செலுத்தவேண்டிய ஆரம்பவகைகள், மற்றும் முறை ஆகியவற்றை அடையாளம் காணவேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.