27 இலட்சத்து 12 ஆயிரம் ரூபா பெறுமதியான வெளிநாட்டு சிகரெட்டுகளை சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு கொண்டு வந்த வர்த்தகர் ஒருவர் கட்டுநாயக்க பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் இன்று வியாழக்கிழமை (04) இடம்பெற்றுள்ளது.
கைது செய்யப்பட்டவர் பிலியந்தலை பிரதேசத்தை சேர்ந்த 48 வயதுடைய வர்த்தகராவார்.
இவர் இன்று அதிகாலை 04.51 மணியளவில் ஓமான் ஏர்லைன்ஸ் விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.
விமான நிலைய பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் சந்தேக நபர் கைது செய்யபப்ட்டுள்ளார்.
விசாரணையில் இவர் கொண்டு வந்த 3 பயணப்பொதிகளில் இருந்தும் 27,120 வெளிநாட்டு சிகரெட்டுகள் அடங்கிய 135 சிகரெட் பெட்டிகள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.