களனி மற்றும் கிரிபத்கொடை பிரதேசங்களில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புக்களில் 261 கிலோ 839 கிராம் கேரள கஞ்சாவுடன் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் விசேட அதிரடிப் படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கோனஹேன முகாமின் விசேட செயற்பாட்டு பிரிவிற்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய பறிமுதல் செய்யப்பட்ட குறித்த கேரள கஞ்சா தொகையின் சந்தைப்பெறுமதி ஒரு கோடி ரூபாய்க்கும் அதிகம் என குறிப்பிடப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட சந்கேகநபர்கள் போதைப்பொருள் கடத்தல், விற்பனை செய்தல் மற்றும் உதவி புரிந்தமை ஆகிய குற்றச்சாட்டுக்களின் கீழ் நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளனர்.