பெருந்தொகை கேரள கஞ்சாவுடன் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நீர்க்கொழும்பு தடாகத்திற்கு அருகில் வைத்து குறித்த சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன்போது சந்தேகநபர்களிடம் இருந்து 250 கிலோ கிராம் கேரள கஞ்சா தொகை கைப்பற்றப்பட்டுள்ளதுடன் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட சொகுசு வாகனம் ஒன்றும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
இவ்வாறு மீட்கப்பட்ட கேரள கஞ்சாவின் பெறுமதி சுமார் 100 மில்லியன் ரூபாய் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்