சட்டவிரோத மின்சார வேலியில் சிக்கி 25 வயதான இளைஞன் ஒருவன் உயிரிழந்துள்ளதுடன், அவருக்கு அருகிலிருந்து நாட்டு துப்பாக்கி ஒன்றும் மீட்கப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் வவுனியா – குடகச்சிக்கொடியில் இடம்பெற்றுள்ளதாக மடுக்கந்தை பொலிஸார் தெரிவித்தனர்.
விலங்கு வேட்டை
குடாகச்சிக்கொடிய மானேரிகுளம் பகுதியில் விலங்குகளை வேட்டையாடுவதற்காக சென்ற இளைஞர் அங்கு சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட மின்வேலியினை சிக்குண்டு பலியாகியுள்ளார்.
குடாகச்சிகொடிய மேதாமாவத்தையைச் சேர்ந்த 25 வயதுடைய உமேஸ் லக்சன் என்கிற இளைஞரே பலியாகியுள்ளார்.
இளைஞரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக வவுனியா பொது வைத்தியசாலைக்கு வைக்கப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை மடுக்கந்தை பொலிஸாரால் முன்னெடுத்துள்ளனர்.