இரத்தினபுரி பகுதியில் இளம் பெண்ணொருவர் மர்மமான முறையில் படுகொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
25 வயதுடைய நிரியல்ல பிரதேசத்தில் வசிக்கும் பெண்ணொருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
நேற்று (27-03-2023) காலை 6.30 மணியளவில் குறித்த யுவதி தனது பணியிடத்திற்கு செல்வதற்காக வீட்டை விட்டு வெளியேறியதாக பெற்றோர்கள் தெரிவிக்கின்றனர்.
பின்னர், அவரது தொலைபேசி வேலை செய்யாததால், மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது வீட்டில் இருந்து சுமார் 200 மீட்டர் தொலைவில் உள்ள வடிகான் ஒன்றின் கீழ் அவரது சடலம் கண்டெடுக்கப்பட்டது.
மேலும், குறித்த பெண் ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் படித்து சில மாதங்களுக்கு முன்பு பட்டம் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
குறித்த பெண்ணின் மரணம் கொலையாக இருக்கலாம் எனவும் கொலைக்கு முன்னர் அவர் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டிருக்கலாம் எனவும் பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
இந்த நிலையில் யுவதியின் மரணம் தொடர்பான மேலதிக விசாரணைகளை இரத்தினபுரி மற்றும் அலபாத்த பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.