அமீரகத்தின் ஷார்ஜாவில் சுஹராவும் அவரது குழந்தைகளும் 25 ஆண்டுகளாக வெளி உலகத்துடன் எந்த தொடர்பும் இல்லாமல் வசித்து வருகின்றனர். இவர்களை குறித்த ஒரு செய்தி தொகுப்பு இதுவாகும்.
இலங்கையில் இருந்து கடந்த 1991 ஆம் ஆண்டு சுஹரா பீபி என்ற பெண் வீட்டு வேலைக்காக ஷார்ஜாவுக்கு வந்தார். வேலைக்காக வந்த எகிப்து குடும்பத்தினர் வீட்டில் கொடுமைகள் தாங்க முடியாத நிலையில் அங்கிருந்து தப்பித்து உயிர்பிழைத்து வெளியேறி மற்றொரு இடத்தில் வேலை செய்து வந்தார். இந்நிலையில் இந்தியரான சந்தோஷ்டன் என்பவருடன் காதல் ஏற்பட்டது.
இதை தொடர்ந்து சட்டப்படி திருமணம் செய்துக்கொள்ள தேவையான ஆவணங்கள் சரிசெய்ய எகிப்து குடும்பத்திடம் சுஹராவின் பாஸ்போர்ட் பெற எவ்வளவு முயற்சி செய்தும் அவர்கள் வழங்கவில்லை. இந்நிலையில் இருவரும் கணவன் மனைவியாக வாழ்க்கையினை தொடங்கினர்.
சட்டப்படியான ஆவணங்கள் எதுவும் இல்லாத காரணத்தால் அதன் பிறகு ஒவ்வொரு முறையும் பல்வேறுபட்ட சிக்னல்களை அவர்கள் சந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இரண்டு குழந்தைகளையும் ஆவணங்கள் எதுவும் இல்லாத காரணத்தால் வீட்டிலேயே பெற்றெடுத்தார் சுஹரா.
சட்டத்திற்கு புறம்பாக குழந்தைகள் பிறந்த காரணத்தால் பிறப்பு சான்றிதழ் எதுவும் இல்லாத நிலையில் இரண்டு குழந்தைகளையும் பள்ளிக்கு அனுப்பவில்லை.
இதற்கிடைய கணவருடன் இணைந்து Business செய்த பங்குதாரர் ஒருவர் தாக்கல் செய்த பொய்யான வழக்கில் கணவர் சந்தோஷை காவல்துறையினர் கைது செய்து நாடு கடத்தினர். ஆவணங்கள் எதுவும் சட்டப்படி கைவசம் இல்லாத காரணத்தால் சந்தோஷின் மனைவி மற்றும் குழந்தைகள் அபுதாபில் தனியாக சிக்கினர்.
தொடர்ந்து நாடுகடத்தப்பட்ட சந்தோஷ் தன்னுடைய மனைவி மற்றும் குழந்தைகள் பிரிந்திருக்க முடியாத நிலையில் அடுத்த சில மாதங்களில் மீண்டும் சட்டத்திற்கு புறம்பாக ஓமான் வழியாக அபுதாபி வந்தார். சில நாட்களில் அவரை மீண்டும் கைது செய்த போலிசார் இந்தியாவுக்கு மீண்டும் நாடுகடத்தினர்.
தொடர்ந்து கணவரும் இல்லாத நிலையில் ஐம்பத்தாறு வயதான சுஹ்ரா கடந்த பல ஆண்டுகளாக அவர்கள் தங்கியிருக்கும் ஒரு அறை கொண்ட வீட்டின், பக்கத்து வீடுகளில் உள்ள குழந்தைகளை பகல் நேரத்தில் பாத்து கொள்ளும் வேலைக்காக(baby care) வழங்கப்படும் சொர்பமான சம்பளத்தில் குழந்தைகளை கவனித்து வந்தார்.
மூத்த மகனுக்கு இருபத்தைந்து வயது, மகளுக்கு இருபத்தி மூன்று ஆகிறது. ஆனால் ஒரு நாள் இந்தியாலில் உள்ள தன் சொந்த கணவனிடம் திரும்பி செல்ல முடியும் என்று சுஹரா நம்பியிர்ந்தார். கோவிட் வந்தவுடன், அந்த வேலையும் பறிபோனது, அவருடைய கனவு அனைத்தையும் கொரோனா புரட்டிப் போட்டது.
இந்நிலையில் தனக்கு எதாவது ஏற்பட்டால் குழந்தைகள் அனாதையாக ஆகிவிடுவார்கள் என்ற பயத்தில் அமீரகத்தில் உள்ள நல்லுள்ளம் கொண்ட மனிதர்கள் மற்றும் அமீரக அதாகாரிகள் உதவியுடன் பாஸ்போர்ட் உள்ள ஆவணங்கள் பெற்று இந்தியா செல்ல உதவுமாறு அமீரக ஏசியானெட் நியூஸ் நிருபர் அருண் அவர்களை தொடர்பு கோண்டுள்ளார் சுஹரா.
இந்நிலையில் இப்படியோரு குடும்பம் ஆமீரத்தில் வாழ்வது வெளியுலகுக்கு இன்று தெரியவந்துள்ளது.
கடந்த சில வருடங்களுக்கு முன்பு முன்று குழந்தைகள் தாய்,தந்தை அடங்கிய 5 பேர் கொண்ட குடும்பம் 32 ஆண்டுகளாக வெளி உலகத்துடன் எந்த தொடர்பு இல்லாமல் அமீரகத்தில் வசித்து வந்த செய்தியை அருண் வெளியிட்டிருந்தார் என்பது குறிப்பிட்டத்தக்கது.
அந்த குடும்பம் கடைசியில் இந்தியா திரும்புவதற்கான அனைத்து உதவிகளும் நல்லுள்ளம் கொண்ட மனிதர்கள் மற்றும் அதிகாரிகள் செய்து வழங்கினர்.