யாழ்ப்பாணம், மானிப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் சட்டவிரோதமாக பெருந்தொகையான மஞ்சளை கடத்தி கொண்டு சென்ற இருவரை நேற்று (12) மானிப்பாய் பொலிஸார் கைது செய்தனர்.
இந்தியாவின் தமிழகத்தில் இருந்து 2,400 கிலோ மஞ்சள் கடத்தி வரப்பட்டு விற்பனைக்காக கொண்டு சென்ற நிலையில் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இதுகுறித்து மேலும் தெரிய வருவதாவது, ஆனைக்கோட்டைப் பகுதியில் சந்தேகத்துக்கிடமான பயணித்த வாகனம் ஒன்றை பொலிஸார் வழிமறித்து சோதனையிட்ட போதே பெருந்தொகையான மஞ்சள் மீட்கப்பட்டது.
சந்தேக நபர்கள் இருவரும் சுதுமலைப் பகுதியை சேர்ந்தவர்கள் என தெரியவருகிறது.
2 சந்தேக நபர்களையும் கைப்பற்றப்பட்ட பொருட்களையும் மல்லாகம் நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (13) முற்படுத்த மானிப்பாய் பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.