கடந்த 24 மணிநேரத்தில் முன்னெடுக்கப்பட்ட பொலிஸ் விசேட சுற்றிவளைப்புகளில் 1,865 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நாடளாவிய ரீதியில் இடம்பெற்ற இந்த சுற்றிவளைப்பில் 613 கிராம் ஹெரோயின் போதைப் பொருள், 746 கிராம் ஐஸ், 16 கிலோ கிராம் கஞ்சா, 3142 போதைமாத்திரைகளும் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனை பொலிஸ் ஊடகப்பேச்சாளாரும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான சட்டத்தரணி நிஹால் தல்துவ தெரிவித்தார்.