நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்படும் யுக்திய சுற்றிவளைப்பில் நேற்று (28.01.2024) அதிகாலை 12.30 உடன் நிறைவடைந்த 24 மணித்தியாலங்களில் 803 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
போதைப்பொருளுடன் தொடர்புடைய குற்றங்கள் தொடர்பில் 562 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். குற்றப்பிரிவில் பட்டியலிடப்பட்டிருந்த 241 சந்தேகநபர்களும் இந்த சுற்றிவளைப்பின் போது கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களில் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 225 பேரும் அடங்குவதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. சுற்றிவளைப்பின் போது 212 கிராம் ஹெரோயின், 101 கிராம் ஐஸ் போதைப்பொருள் பாதுகாப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்டவர்களில் ஐவர், தடுத்து வைத்து விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளனர்.