2026ஆம் ஆண்டு தொடக்கம் முதல் 25 நாட்களில் இலங்கை 223,645 சுற்றுலாப் பயணிகளை வரவேற்றுள்ளது, என இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
இந்த காலப்பகுதியில் ஒரே நாளில் அதிகளவு பயணிகள் ஜனவரி 15-ஆம் திகதி வருகை தந்துள்ளனர். அந்த எண்ணிக்கை 41,603 ஆகும்.
இதற்கு மேலதிகமாக, ரஷ்யாவிலிருந்து 22,876 பேரும், ஐக்கிய இராச்சியத்திலிருந்து 23,329 பேரும், ஜேர்மனியிலிருந்து 14,431 பேரும் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

