2025-ஆம் ஆண்டு முதல் அறிமுகப்படுத்தப்படும் அனைத்து கார்களும் எலக்ட்ரிக் கார்களாக இருக்கும் என ஜாகுவார் நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஜாகுவார் மற்றும் லேன்ட் ரோவர் பிராண்டுகளில் பல எலக்ட்ரிக் கார் மொடல்கள் 2030-ஆம் ஆண்டுக்குள் வரிசையாக அறிமுகப்படுத்தவுள்ளதாக ஜாகுவார் நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஜாகுவார் தனது எலெக்ட்ரிக் கார்களுக்கான புதிய தொழில்நுட்பத்திற்காக ஆண்டுக்கு சுமார் 2.5 பில்லியன் டொலர் செலவிட திட்டமிட்டுள்ளதாக நிறுவனத்தின் தலைமை நிர்வாகி தியரி பொல்லோரே கூறியுள்ளார்.
ஐரோப்பா, சீனா உள்ள நாடுகள் கார்பன் உமிழ்வைக் குறைக்க எலக்ட்ரிக் கார்களுக்கு மாறிவருகின்றன. அதற்கான உற்பத்தியையும் தொடங்கியுள்ளனர்.
அதேபோல், நீண்ட காலமாக பிரித்தானிய அரசு 2030 முதல் அனைத்து பெட்ரோல் மற்றும் டீசல் கார்களையும் விற்பனை செய்வதை சட்டவிரோதமாக்க திட்டமிட்டுள்ளது.இந்நிலையில், ஜாகுவார் நிறுவனம் இந்த முடிவை எடுத்துள்ளதாக அறிவித்துள்ளது.