2024ஆம் ஆண்டின் மிகவும் பிரபலமான 10 தனிப் பயண சுற்றுலா இலக்குகளுக்கான பட்டியலில் இலங்கை 4 வது இடத்தைப் பிடித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரபல வணிக சஞ்சிகையான ஃபோர்ப்ஸ் இந்த தரப்படுத்தலை மேற்கொண்டுள்ளது.
30 முதல் 50 வயதுக்கு இடைப்பட்ட சுற்றுலாப் பயணிகளை சிறு குழுவாக இணைத்து அவர்களுக்கான பயணங்களை ஏற்பாடு செய்யும் ஃப்ளாஷ் பேக் என்ற நிறுவனத்தின் சமீபத்திய கணக்கெடுப்புக்கு அமைய இந்த தரப்படுத்தல் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
2024 ஆம் ஆண்டில் தனிப் பயணிகளுக்கு 4 வது மிகவும் பிரபலமான இடமான இலங்கை, பயணிகளுக்கு மெதுவான ரயில் பயணம் உள்ளிட்ட முக்கிய பயணப் போக்கை அனுபவிக்க வாய்ப்பளிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொருளாதார நெருக்கடிக்கு உள்ளானதன் பின்னர், இலங்கை மீண்டும் ஒரு பாரிய மீட்சியை நோக்கி முன்னேறி வருகின்ற நிலையில் இந்த தரப்படுத்தல் மேலும் பல சுற்றுலா பயணிகளை ஈர்ப்பதற்கு வழிவகுக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இவ்வாறான நிலையில், ஜப்பான், அர்ஜென்டினா, எகிப்து, கொலம்பியா, ஈக்வடோர், ஜோர்தான், தாய்லாந்து, பிலிப்பைன்ஸ் மற்றும் பாலி தீவுகளுக்கு மத்தியில் இலங்கை 4 வது நாடாக பட்டியல் படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.