2023 ஜனவரி 1 ஆம் திகதி முதல் அமலுக்கு வரும் இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கட்டுப்பாட்டு விதிமுறைகள் அடங்கிய விசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.
நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கை அமைச்சராக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் இது தொடர்பான வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.
காலத்துக்கு காலம் இறக்குமதி மட்டுப்படுத்தப்பட்ட பொருட்கள் மற்றும் அந்த பொருட்களின் இறக்குமதி தொடர்பான விசேட ஏற்பாடுகள் புதிய வர்த்தமானியில் உள்ளடக்கப்பட்டுள்ளன.