2023ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் முன்மொழியப்பட்ட செஸ் வரியானது, பாடசாலை பாடப் புத்தகங்கள் மற்றும் பாடசாலை உபகரணங்களுக்கு பொருந்தாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனை நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய நாடாளுமன்றத்தில் இன்று தெரிவித்துள்ளார்.
பாடசாலை உபகரணங்களின் விலைகள் மூன்று மடங்காக அதிகரித்தமை தொடர்பில் கடந்த சில தினங்களாக அதிகளவில் பேசப்பட்ட நிலையிலேயே, அரசாங்கம் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.