சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட 200 மில்லியன் சிகரெட்டுகள் நேற்று முன்தினம் புதன்கிழமை (14) அழிக்கப்பட்டுள்ளன.
அதிகாரிகளால் கைப்பற்றபட்டு கெரவலப்பிட்டியவில் உள்ள களஞ்சியசாலையில் வைக்கப்பட்டிருந்த சிகரெட்டுகளே இவ்வாறு அழிக்கப்பட்டுள்ளன.
இவ்வாறு அழிக்கப்பட்ட சிகரெட்டுகளின் பெறுமதி 15 பில்லியன் ரூபா என தெரிவிக்கப்படுகிறது.
இலங்கை சுங்க அதிகாரிகளால் 2021 ஆம் ஆண்டு முதல் இந்த சட்டவிரோத சிகரெட்டுகள் கைப்பற்றப்பட்டிருந்ததாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது..