இலங்கையில் 200 ஆண்டுகால வரலாறு கொண்ட யாழ்ப்பாணக் கல்லூரிக்கு முதல் தடவையாக ஒரு பெண் அதிபராக நியமிக்கப்பட்டுள்ளார்.
200 ஆண்டுகால வரலாறு
1823 ஆம் ஆண்டு ஸ்தாபிக்கப்பட்ட யாழ்ப்பாணக் கல்லூரியின் 17 ஆவது அதிபராக ஒரு பெண் பொறுப்பேற்கவுள்ளதாக அக்கல்லூரியின் பணிப்பாளர் சபை தற்போது உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
ருஷிரா குலசிங்கம் 2023 ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் திகதி முதல் யாழ்ப்பாணக் கல்லூரியின் அதிபராகச் செயற்படுவார் எனவும் அக்கல்லூரியின் பணிப்பாளர் சபை குறிப்பிட்டுள்ளது.
யாழ்ப்பாணக் கல்லூரியின் முதல் பெண் அதிபராக ருஷிரா குலசிங்கம் தென்னிந்திய திருச்சபையின் யாழ்.மறைமாவட்டத்தின் வட்டுக்கோட்டையிலுள்ள தோமஸ் பேராலயத்தில் எதிர்வரும் நவம்பர் 6 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை புதிய அதிபராக பதவியேற்கவுள்ளார்.
ருஷிரா குலசிங்கம் தனது ஆரம்பக்கல்வியை கொழும்பு மெதடிஸ்ட் கல்லூரியிலும் யாழ்ப்பாணம் சுண்டிக்குளி பெண்கள் கல்லூரியிலும் கற்றார்.