உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகளில் பணிபுரியும் 200 அதிகாரிகளுக்கு எதிராக நாடு பூராகவும் மக்கள் முறைப்பாடுகளைச் செய்துள்ளனர்.
இந்நிலையில் மக்களுக்கான சேவைகளை உரிய நேரத்தில் நிறைவேற்றிக் கொடுப்பதில்லை, உதாசீனம், தரக்குறைவாக நடந்துகொள்ளல் உள்ளிட்ட பல முறைப்பாடுகள் இந்த அதிகாரிகளுக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ளன என்று உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் இராஜாங்க அமைச்சர் ஜானக வகும்புர தெரிவித்தார்.
இது தொடர்பில் உரிய முறையில் விசாரணை நடத்தி குற்றம் நிரூபிக்கப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.