அரசாங்கம் சுமார் 200 மதுபானசாலை உரிமங்களை வழங்க உள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றம் சுமத்தியுள்ளார்.
எப்.எல் ரக மதுபானசாலை உரிமங்களே இவ்வாறு வழங்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறு அனுமதிப்பத்திரம் வழங்குவதற்கு கப்பமாக தலா இரண்டு கோடி ரூபாவினை அரசாங்கம் பெற்றுக்கொள்வதாக தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே இவ்வாறான 15 மதுபானசாலைகளுக்கு உரிமங்கள் வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
மேலும் ஆறு மதுபான உற்பத்தி நிலையங்களுக்கான உரிமங்களும் வழஙக்கப்பட்டுள்ளன.
மதுவரித் திணைக்கள ஆணையாளர் நாயகமாக குமரசிறி என்பவரை அரசாங்கம் நியமித்ததே இவ்வாறு உரிமங்களை வழங்கும் நோக்கிலாகும் என தெரிவித்துள்ளார்.
தேர்தலுக்காக நிதி திரட்டும் நோக்கில் இவ்வாறு உரிமங்கள் வழங்கப்படுகின்றதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.