லிந்துலையில் காதலன் ஒருவர் காதலியிடம் தங்கம் மற்றும் பணத்தை கொள்ளையடித்த சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது.
நானுஓயா பிரதேசத்தை வசிப்பிடமாகக் கொண்ட 20 வயதுடைய காதலனே இச் செயலை செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த இளைஞன் பசறை பிரதேசத்தைச் சேர்ந்த 41 வயதுடைய பெண்ணுடன் உறவுமுறையில் ஈடுபட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.
குறித்த இளைஞனுக்கு பணத் தேவை இருந்ததால் திட்டமிட்டு தனது காதலியை லிந்துலை பிரதேசத்திற்கு வரவழைத்து தங்கப் பொருட்கள் மற்றும் கைத்தொலைபேசிகளை கொள்ளையடித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.