பதுளையில் பாடசாலை மாணவி ஒருவர் காதலனால் பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாகிய நிலையில், தற்கொலை செய்து கொண்டுள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சம்பவத்தில் பதுளை பகுதியை சேர்ந்த 11ஆம் வகுப்பு படித்து வந்த 16 வயதுடைய மாணவி ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில்,
மாணவியின் தந்தை பிரிந்து சென்ற நிலையில், தாய் வெளிநாடு சென்ற நிலையில் மாணவி, தனது 70 வயதுடைய பாட்டியின் பாதுகாப்பில் இருந்துள்ளார்.
இந்நிலையில் ஒரு வாரத்திற்கு முன்னர் 20 வயதுடைய காதலனுடன் பயிற்சி வகுப்பில் கலந்து கொள்வதாக கூறிவிட்டு முச்சக்கரவண்டியில் சென்றுள்ளார்.
இதன்போது காதலனால் பலாத்காரத்திற்கு உட்படுத்தப்பட்ட குறித்த மாணவி வீட்டிற்கு வந்து தனது பாட்டியின் மாத்திரைகளை உட்கொண்டு நோய்வாய்ப்பட்டு பதுளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவர் தனது தோழிக்கு அனுப்பிய குறுஞ்செய்தியில், தான் தனது காதலனால் பலாத்காரம் செய்யப்பட்டதாகவும் அதன் காரணமாகவே மாத்திரைகளை உட்கொண்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து சந்தேகத்தின் பேரில் காதலனை கைது செய்த பதுளை பொலிஸார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளனர்.