தென்னிலங்கையில் தனது 20 வயது மகனுக்கு பல பரிசுப் பொருட்களைக் கொடுத்து, அவனை அடிமையாக்கி பாலியல் துஸ்பிரயோகம் செய்வதாக இளைஞரின் தாயார் பொலிஸ் முறைப்பாடு செய்துள்ளதாக சிங்கள சமூகவலைத்தளம் செய்தி வெளியியிட்டுள்ளது.
வறக்காகொடப் பகுதியில் இடம்பெற்றதாக கூறப்படும் இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
இத்தாலியில் நீண்டகாலமாக வசித்து வந்த 46 வயதான திருமணமாகாத சிங்களப் பெண் ஒருவர் மீதே மகனின் தாய் முறைப்பாடு கொடுத்துள்ளார்.
அவரது முறைப்பாட்டில், தனது மகன் க.பொ.த உயர்தரப்பரீட்சை இரண்டாவது தடவையாக எடுக்கவுள்ளார்.
இந் நிலையில் அயல்வீட்டில் வசிக்கும் பெண் தனது மகனுக்கு ஐ.போன் மற்றும் பல பரிசுப்பொருட்களை கொடுத்து அவனை தனது இச்சைகளுக்க பயன்படுத்தி வருகின்றார்.
குறித்த பெண்ணுடனான தொடர்பை நிறுத்துமாறு தான் மகனை வற்புறுத்திய போது மகன் தன்னையும் சகோதரிகளையும் விட்டுவிட்டு அப் பெண்ணுடனேயே தங்கியுள்ளார் எனவும் தாயார் கூறியுள்ளார்.
இந்நிலையில் சம்பவம் தொடர்பாக நடவடிக்கை எடுத்து தனது மகனை தன்னிடம் மீட்டுத் தருமாறு இளைஞனின் தாய் பொலிசாரிடம் முறையிட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.