20 முதல் 29 வயதிற்கு உட்பட்டவர்களிற்கு தடுப்பூசி வழங்கும் நடவடிக்கைகள் கொழும்பு, கம்பஹா, களுத்துறை, காலி மாவட்டங்களில் இன்று முதல் ஆரம்பமாகவுள்ளது.
தற்போது தடுப்பூசி செலுத்தப்படும் நிலையங்களிலேயே இந்த வயதினருக்கும் தடுப்பூசி செலுத்தப்படும் என்று கொவிட் 19 வைரசு தொற்று பரவலை தடுக்கும் செயற்பாட்டு மத்திய நிலையத்தின் பிரதானியும் இராணுவ தளபதியுமான ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இதேவேளை 20 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி வழங்கும் நடவடிக்கைகள் இன்று முதல் ஆரம்பமாகும் என கொழும்பு மாநகர சபையின் தலைமை மருத்துவர் ருவான் விஜயமுனி தெரிவித்துள்ளார்.
கொழும்பு மாநகர சபைக்கு உட்பட்ட ஐந்து பகுதிகளில் தடுப்பூசி வழங்கும் நடவடிக்கைகள் இடம்பெறும் என அவர் குறிப்பிட்டார்.
இதற்கமைவாக ,கொழும்பு சுகததாச உள்ளக அரங்கு, ஜிந்துப்பிட்டி பொதுச் சுகாதார அலுவலகம், ஃபோர்ப்ஸ் வீதி சனசமூக நிலையம், கெம்பல் பார்க், சாலிகா மைதானம், ரொக்ஸி கார்டின் ஆகிய இடங்களில் இன்றைய தினம் தடுப்பூசி ஏற்றப்படும்.