யாழ்.கோப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சில பகுதிகளில் இன்று அதிகாலை 2 மணி தொடக்கம் அதிகாலை 6 மணிவரை பொலிஸாரினால் நடத்தப்பட்ட விசேட சுற்றிவளைப்பு தேடுதலின்போது 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட 9 போில் 3 பேர் அண்மையில் இடம்பெற்ற வன்முறை சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் என பொலிஸார் கூறியுள்ளனர்.
யாழ்.பிராந்திய பிரதி பொலிஸ்மா அதிபர் பிரியந்த லியனகே வழிகாட்டிலில் மூத்த பொலிஸ் அத்தியட்சகர்
மற்றும் கோப்பாய் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பங்களிப்புடன் குறித்த சுற்றிவளைப்பு தேடுதல் நடத்தப்பட்டிருக்கின்றது.
இதேபோல் கைது செய்யப்பட்ட வன்முறைச் சம்பவங்களுடன் தொடர்புடைய 22வயது, 23வயது, 25வயது நபர்கள்
3 போிடம் விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படவுள்ளதுடன், ஏனை 6 பேர் ஆரம்பக்கட்ட விசாரணைகளின் பின் விடுவிக்கப்படுவார்கள் என பொலிஸார் கூறியுள்ளனர்.