2 கிலோ கேரள கஞ்சாவுடன் காத்தான்குடியைச் சேர்ந்த 40 வயதுடைய நபரொருவர் வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஓட்டமாவடி பசாரில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபர் யாழ்ப்பாணத்தில் இருந்து பிறைந்துரைச்சேனைக்கு வியாபார நோக்கில் கேரள கஞ்சாவினை கடத்தி வந்த நிலையில் வாழைச்சேனை காகித ஆலை இராணுவப் புலனாய்வுப் பிரிவிற்கு கிடைத்த இரகசியத் தகவலுக்கமைவாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய போதை ஒழிப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இவருடமிருந்து 2 கிலோ அளவிலான கேரள கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளதுடன், நீதிமன்ற உத்தரவின் பேரில் மட்டக்களப்பு சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அத்தோடு, இவருடன் தொடர்புடைய நபர்கள் தொடர்பில் வாழைச்சேனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன், கேரள கஞ்சாவினை வரவழைத்த பிறைந்துறைச்சேனை பகுதியைச்சேர்ந்த சூத்திரதாரியை காகித ஆலை இராணுவப் புலனாய்வுப்பிரிவினர் தேடி வருகின்றனர்.