உதவும் இதயங்கள் சுவிஸ் கிளையின் கணக்காளர் திரு மணிவண்ணன் அவர்களின் தந்தை அமரர் வேலுப்பிள்ளை நச்சினார்க்கினியசிவம் அவர்களின் 09.12.2021 4ம் ஆண்டு திதி நினைவாக மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் மற்றும் விபுலானந்த சிறுவர் இல்லக்குழந்தைகளுக்கு விசேட உணவும் வழங்கியுள்ளார் மாணவர்களுக்கு கல்வி சார்ந்த உதவிகள் செய்வது அமரர் வேலுப்பிள்ளை நச்சினார்க்கினியசிவம் அவர்களிற்கு விருப்பமானதொன்று அந்த வகையில் வருடம் தோறும் அன்னாரின் நினைவாக உதவிகள் வாங்கிவைக்கப் படுகின்றது திரு மணிவண்ணன் அவர்களினால். அந்த வகையிலே அமரர் வேலுப்பிள்ளை நச்சினார்க்கினியசிவம் அவர்களின் ஆத்ம சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திக்கின்றோம். அத்துடன் அவருடைய மகன் திரு மணிவண்ணன் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவிப்பதுடன் நன்றியினையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.முக்கிய குறிப்பு: கல்வி உபகரணங்கள் வருகின்ற சனிக்கிழமை வழங்கி வைக்கப்படும்.
“உதவும் இதயங்கள் நிறுவனம் Germany” அறிவித்துள்ளது.