பூநகரி பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட நல்லூர் பகுதியில் 181.1 கிலோகிராம் கஞ்சாவுடன் ஒருவர் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸ் மற்றும் இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலிற்கு அமைவாக மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கைக்கு அமைவாக இவை மீட்கப்பட்டுள்ளன.
இராணுவத்தினரும், பொலிஸாரும் இணைந்து மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது கப் ரக வாகனமொன்று சுற்றிவளைக்கப்பட்டுள்ளது.
இதன்போது குறித்த வாகனத்திலிருந்து கஞ்சா மீட்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் கிளிநொச்சியைச் சேர்ந்த வாகன சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
அதேவேளை, கஞ்சா பொதிகளை ஏற்றிய வாகனமும், கடத்தலிற்குப் பயன்படுத்தப்பட்ட வள்ளம் மற்றும் அதன் இயந்திரமும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
சம்பவம் தொடர்பான விசாரணைகளை பூநகரி பொலிஸார் மேற்கொண்டு வருவதுடன் கிளிநொச்சி நீதவான் நீதிமன்றில் வழக்குப் பதிவு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டள்ளது.