இம்மாத இறுதியில் 18 வயதிற்கும் 30 வயதிற்கும் இடைப்பட்டவர்களுக்கு முதலாவது தடுப்பூசியை ஏற்றக்கூடியதாக இருக்கும் என்று அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தின் தலைவர் விசேட வைத்தியருமான பிரசன்ன குணசேன தெரிவித்துள்ளார்.
30 வயதிற்கு மேற்பட்டவர்களுள் 96 வீதமானோருக்கு கொவிட் தடுப்பூசியின் ´முதலாவது டோஸ்´ ஏற்றும் பணி நிறைவடைந்திருப்பதாக தெரிவித்த அவர். இவர்களுக்கு ´இரண்டாவது தடுப்பூசி´ ஏற்றும் நடவடிக்கை தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் சில தினங்களில் மேலும் பெருந்தொகை தடுப்பூசி நாட்டிற்கு கிடைக்கவுள்ளது என்றும் அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தின் தலைவர் விசேட வைத்தியருமான பிரசன்ன குணசேன கூறினார்.