ஒழுக்கமுள்ள சமூகத்தை ஏற்படுத்துவதற்காக 18 வயதுக்கும் அதிக வயதுடையவர்களுக்கு இராணுவ முகாமிற்குள் இராணுவப் பயிற்சி அளிக்க வேண்டும் என்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் அட்மிரல் சரத் வீரசெகர மீண்டும் தெரிவித்துள்ளார்.
நாட்டில் தற்சமயம் ஒழுக்கம் சீர்கேட்டு நிலையை அடைந்திருப்பதாக அவர் குறிப்பிட்டார். பாணந்துறை – அடுபோமுல்ல மற்றும் ஹிரண பொலிஸ் நிலையத்தை இன்று திறந்துவைத்து உரையாற்றியபோது அவர் இதனைக் கூறினார்.