பொசன் தினத்தை முன்னிட்டு 173 சிறைக் கைதிகளை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நீதி அமைச்சு தெரிவித்துள்ளது.
சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷவினால் கைதிகளை விடுவிக்குமாறு மேற்கொள்ளப்பட்ட பரிந்துரைக்கு அமைய இவ்வாறு கைதிகள் விடுதலை செய்யப்படவுள்ளனர்.
அதன்படி அபராதம் செலுத்தத் தவறியதால் சிறையில் அடைக்கப்பட்டுள்ள 141 கைதிகளுக்கு அரசின் பொது மன்னிப்பின் கீழ் செலுத்த வேண்டிய அபராதங்கள் தள்ளுபடி செய்யப்படும் என்றும் 14 நாட்கள் குறைவதன் காரணத்தால் மேலும் 32 கைதிகள் விடுவிக்கப்படவுள்ளனர்.
அதிகபட்சமாக 23 கைதிகள் வெலிக்கடை சிறைச்சாலையில் இருந்து விடுவிக்கப்படவுள்ளனர் என்றும் அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், குருவிட்ட, மஹர, நீர்கொழும்பு, வீரவில, வாரியபொல, போகம்பர, அநுராதபுரம், களுத்துறை, கொழும்பு மகசின் சிறைச்சாலை, அங்குனகொலபெலஸ்ஸ, பொலன்னறுவை, கேகாலை, மட்டக்களப்பு, மொனராகலை உள்ளிட்ட பல சிறைச்சாலைகளில் இருந்து இவ்வாறு கைதிகள் விடுவிக்கப்படவுள்ளனர் .