LPL கிரிக்கெட் போட்டித் தொடரின் இன்று இடம்பெறும் 15 ஆவது போட்டியில் Jaffna Kings மற்றும் Galle Gladiators அணிகள் மோதுகின்றன.
அதன்படி, போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற Jaffna Kings அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது.
முதலில் துடுப்பெடுத்தாடிய Jaffna Kings அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 170 ஓட்டங்களைப் பெற்றது.
Jaffna Kings அணி சார்பாக அபிப் ஹுசைன் 54 ஓட்டங்களையும் சதீர சமரவிக்ரம 32 ஓட்டங்களையும் பெற்றனர்.
அதன்படி, Galle Gladiators அணிக்கு 171 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு ஆர் பிரேமதாச மைதானத்தில் இந்த போட்டி நடைப்பெற்று வருகிறது.