இன்று (04) காலை வெலிசர பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவத்தில் காயமடைந்த மேலும் மூவர் ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கொழும்பு – நீர்கொழும்பு பிரதான வீதியின் வெலிசர பகுதியில் இன்று காலை 9 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கொழும்பில் இருந்து நீர்கொழும்பு திசையில் பயணித்த அதிசொகுசு வாகனம் ஒன்று வீதியை விட்டு விலகி எதிர் திசையில் பயணித்த மோட்டர் வாகனம், முச்சக்கரவண்டி மற்றும் இரண்டு மோட்டார் சைக்கிள்களுடன் மோதி விபத்துக்கு உள்ளாகி உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
16 வயதுடைய சிறுவன் ஒருவனே இவ்வாறு குறித்த அதிசொகுசு வாகனத்தை செலுத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
வேகக்கட்டுப்பாட்டை இழந்ததில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒருவரே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவம் தொடர்பில் மஹபாகே பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.