நானுஓயா பிரதேசத்தில் 16 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றவாளிக்கு நுவரெலியா மேல் நீதிமன்றம் 10 வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்துள்ளது.
2011ஆம் ஆண்டு நானுஓயா பகுதியைச் சேர்ந்த நபரால் மேற்படி பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமி வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, 52 வயதுடைய சந்தேகநபருக்கு எதிரான அனைத்து குற்றச்சாட்டுகளும் நிரூபிக்கப்பட்டதை அடுத்து, குற்றவாளிக்கு 10 வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 500,000 ரூபா நட்டஈடு வழங்கப்பட வேண்டும் என்றும், செலுத்தத் தவறினால் மேலும் 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.
இதுதவிர, வழக்கு விசாரணைக்காக 15,000 ரூபாயை நீதிமன்றத்தில் செலுத்த வேண்டும் என்றும், அந்த தொகையை செலுத்தாவிட்டால், மூன்று மாதம் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.