இனந்தெரியாத நபரால் விஷம் வைத்து 16 மாடுகள் கொல்லப்பட்ட சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது.
இச் சம்பவம் வவுனியா பூம்புகாரில் நேற்று (20) இடம் பெற்றுள்ளது.
பதினேழு கால்நடைகளின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும் அவற்றில் சில ஆபத்தான நிலையில் உள்ளதாகவும் வவுனியாவில் உள்ள அரச கால்நடை வைத்திய அலுவலகம் தெரிவித்துள்ளது.
கால்நடைகள் நெல்லை சாப்பிட்டதால் ஆத்திரமடைந்த நபர் மாடுகளுக்கு விஷம் வைத்து கொன்றிருக்கலாம் என மாடுகளின் உரிமையாளர்கள் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளனர்.
மேலும் திங்கள்கிழமை காலை அச் சந்தேக நபரை தேடி செல்கையில் அந் நபர் தப்பி சென்றுள்ளதாக தெரிய வந்துள்ளது