பாகிஸ்தானில் இருந்து இலங்கைக்கு படகில் 155 கிலோகிராம் ஹெரோயின் போதைப் பொருளை கடத்தி வந்த 7 பாகிஸ்தான் நாட்டை சேர்ந்தவர்கள் உட்பட 9 பேரை மட்டக்களப்பு கிழக்கு பிராந்திய ஈரான் இலங்கை கடல் பகுதியில் வைத்து இன்று அதிகாலையில் (11) மட்டக்களப்பு மாவட்ட புலனாய்வு பிரிவு பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் ஏ.ரி.ஏ.ரி தாரக சுபேத கடற்படையுடன் இணைந்து கைது செய்துள்ளதாகவும் இவர்களுடன் 4 தினங்களில் கரையை வந்தடைவார்கள் என பொலிஸ் உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
மாவட்ட புலனாய்வு பிரிவு பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் ஏ.ரி.ஏ.ரி தாரக சுபேதவுக்கு கிடைத்த தகவல் ஒன்றிற்கமைய பொலிஸ் மா அதிபரின் ஆலோசனையில் கிழக்கு மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் கமல் சில்வாவின் வழிகாட்டலில் மட்டக்களப்பு மாவட்ட உதவி பொலிஸ் மா அதிபர் ஜ.என்.கருணாரட்ன மற்றும் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சுகத் மாசிங்க ஆகியோரின் மேற்பார்வையில்,
இந்த விசேட நடவடிக்கை மட்டு மாவட்ட புலனாய்வு பிரிவு பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் ஏ.ரி.ஏ.ரி தாரக சுபேத தலைமையிலான புலனாய்வு பிரிவினரான ஜெயசேன, உதவி ஆய்வாளர் சுகத் பண்டார, உதவி ஆய்வாளர் ஆலோக பண்டார , எச்.பி.ஏ.எஸ். உதயகுமார ஆர். புருசோத்மன், றொபேட்ரூபன் ஆகியோர் கடற்படையுடன் இணைந்து இலங்கை ஈரான் கடல் பரப்பில் இரவு பகலாக ஹரோயின் போதைப் பொருள் கடத்தல் காரரை கண்காணித்து வந்தனர்.
இந்த நிலையில் குறித்த படகு மட்டக்களப்பு கிழக்கு பிராந்திய இலங்கை ஈரான் கடலில் வைத்து மடக்கி பிடித்தபோது படகில் இருந்து 155 கிலோக்கிராம் ஹெரோயின் போதைப் பொருளை மீட்டதுடன் 7 பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்தவர்கள் உட்பட 9 பேரை கைது செய்தனர்.;.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களை கடலில் இருந்து கொழும்பு கடற்படை முகாமிற்கு அழைத்துவர நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் 4 தினங்களில் கரையை வந்தடைவார்கள் என எதிர்பாப்பதாக அவர் தெரிவித்தார்.
இதேவேளை கடந்த 3 திகதி பாகிஸ்தானில் இருந்து இலங்கைக்கு படகு ஒன்றில் 301 கிலோகிராம் போதைப் பொருளுடன் இலங்கை இந்திய கடற்பரப்பில் வைத்து 4 பாகிஸ்தானிகள் உட்பட 7 பேரை இதே மட்டு மாவட்ட புலனாய்வு பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் ஏ.ரி.ஏ.ரி தாரக சுபேத கடற்படையுடன் இணைந்து கைது செய்து கொழும்பு கடற்படை முகாமிற்கு கொண்டுவந்தமை குறிப்பிடத்தக்கது