நாட்டில் எதிர்வரும் 15 ஆம் திகதிக்கு பின்னர் எரிபொருள் விநியோகத்தில் பாரிய சிக்கல்கள் ஏற்படுமென இலங்கை பெற்றோலிய தாங்கி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
எரிபொருளை பெற்றுக்கொள்வதற்கு முன்பணம் செலுத்த வேண்டுமென பெற்றோலிய கூட்டுத்தாபனம் குறிப்பிட்டுள்ளதாகவும் அச் சங்கம் தெரிவித்துள்ளது. அதேசமயம் இதற்கு முன்னர் எரிபொருள் கிடைத்த பின்னரே பணம் செலுத்தப்பட்டதாக இலங்கை பெற்றோலிய தாங்கி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் தற்போது , முற்பணம் செலுத்தி எரிபொருள் கொள்வனவு செய்யும் போது காத்திருக்க வேண்டிய நிலைமை ஏற்படுமோ என்ற நிலைமை காணப்படுவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதனால், விநியோக நடவடிக்கைகள் சிக்கலடையும் நிலைமை காணப்படுவதாக இலங்கை பெற்றோலிய தாங்கி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.