15 வயது சிறுமியை பாலியல் விற்பனையில் ஈடுபடுத்திய முக்கிய குற்றவாளி போதைப்பொருள்
கடத்தல் மற்றும் பண மோசடி ஆகியவற்றில் ஈடுபட்டுள்ளார் என்ற குற்றச்சாட்டுகள் குறித்து போலீஸ்
போதைப்பொருள் பணியகம் மற்றும் சிஐடி தனித்தனியாக விசாரணை நடத்தி வருகின்றன.
கொழும்பு மேலதிக நீதிவானிடம், குழந்தைகள் மற்றும் பெண்கள் பணியகம் நேற்று (29) தகவல்
அளித்தது.
15 வயது சிறுமியை இணையம் மூலம் விற்பனை செய்து, பெரும் பாலியல் வலையமைப்பை நடத்தி
வந்த ஒருவர் அண்மையில் மவுண்ட் லவனியா பொலிசாரால் கைது செய்யப்பட்டார். இந்த
குற்றச்சம்பவத்துடன் தொடர்புடைய 40 இற்கும் அதிகமானவர்கள் கைதாகியமை குறிப்பிடத்தக்கது.
இந்த விவகாரத்தின் பிரதான சந்தேகநபரின் வழக்கு நேற்று விசாரணைக்கு எடுக்கப்பட்டது.
இதன்போது, சிறுமியை நிர்வாணமாக்கி பாலியல் துஷ்பிரயோகம் செய்யும் காட்சிகளை பதிவு
செய்து, இணையத்தில் பல்வேறு நபர்களுக்கு வீடியோவை விற்றதாக புலனாய்வாளர்கள் வெளிப்படுத்தினர்.