15 வயது காதலியின் வீட்டுக்குள் இரகசியமாக நுழைந்து, காதலியுடன் உடலுறவு கொண்ட காதலன் அந்த இடத்திலேயே வெட்டிக் கொல்லப்பட்டுள்ளார்.
அவிசாவளை, புவக்பிட்டி, ஹங்குரால பகுதியில் நேற்று முன்தினம் (27) இரவு இந்த பயங்கர சம்பவம் நடந்தது.வீட்டிலுள்ள அனைவரும் படுக்கைக்கு சென்ற பின்னர், வீட்டில் அசாதாரண சத்தம் எழுந்ததையடுத்து, சிறுமியின் தந்தை பெரிய கத்தியொன்றுடன் வீட்டுக்குள் சத்தமின்றி தேடுதல் நடத்தினார்.
மகளின் அறை கதவை தட்டியுள்ளார். எந்த பதிலும் இல்லாததால் திடீரென அதை உடைத்துக் கொண்டு உள்நுழைந்துள்ளார்.
அங்கு படுக்கையில் மகளும், இளைஞன் ஒருவனும் நிர்வாணமாக காணப்பட்டுள்ளனர்.
ஆத்திரமடைந்த தந்தை அந்த இடத்திலேயே இளைஞனை வெட்டிக் கொன்றுள்ளார்.
23 வயது இளைஞனே கொல்லப்பட்டுள்ளார்.
தந்தை கைது செய்யப்பட்டுள்ளார்.