இலங்கையில் 14,000 கால்நடை பண்ணைகள் பல்வேறு காரணங்களால் அண்மையில் மூடப்பட்டுள்ள பெரும்பாலான பண்ணைகள் சிறிய அளவிலானவை என கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.
பண்ணைகளில் கால்நடைகள் திருடப்படுவது அதிகரித்துள்ளதால் அவை மூடப்படும் நிலை ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.
எவ்வாறாயினும், விலங்குகள் திருட்டு காரணமாக சிறு பண்ணைகள் மூடப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என கோபா குழு தெரிவித்துள்ளது.
அத்துடன், அவுஸ்திரேலியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட 104 ஆடுகள் இம்புலா தண்டா மற்றும் தெலஹெரா ஆடு வளர்ப்பு நிலையங்களில் உயிரிழந்துள்ளமை தொடர்பில் குழு கவனம் செலுத்தியுள்ளதாகவும் சுட்டிகாட்டப்பட்டுள்ளது.