ஆற்றில் மூழ்கி பாடசாலை மாணவன் ஒருவர் காணாமல் போயுள்ளதாக லிந்துலை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
குறித்த சம்பவம் லிந்துலை காவல்துறை பிரிவிற்குட்பட்ட ஆக்ரா ஓயா பகுதியில் இடம்பெற்றுள்ளது
இவ்வாறு காணாமல் போயுள்ளவர் லிந்துலை பகுதியைச் சேர்ந்த 14 வயதுடைய சிறுவன் என தெரிவிக்கப்படுகிறது.
சிறுவனைத் தேடும் பணி
காணாமல் போன சிறுவன் மேலும் சில நண்பர்களுடன் இணைந்து, மீன் தொட்டிக்குத் தேவையான கற்களை சேகரிப்பதற்காகச் சென்றிருந்த போதே ஆக்ரா ஓயாவில் விழுந்து இவ்வாறு நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
காவல்துறை கடற்படை பிரிவின் நுவரெலியா பிரிவினரும் பிரதேசவாசிகளும் இணைந்து காணாமல் போன சிறுவனைத் தேடும் பணிகளில் ஈடுபட்டுள்ளன.

