தனது தங்கையை கொழும்பு பஸ் நிலையத்தில் வைத்து விட்டு மூத்த சகோதரி ஒருவர் தனது காதலனுடன் தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
வெலிகம பிரதேசத்தைச் சேர்ந்த 23 வயதுடைய யுவதி ஒருவர் தனது 14 வயது சகோதரியுடன் கடந்த 21ஆம் திகதி வெலிகமவில் இருந்து கொழும்பு நோக்கி வருகை தந்துள்ளார்.
பின்னர் குறித்த சிறுமியான தனது சகோதரியை கொழும்பு கோட்டையில் விட்டுவிட்டு தனது காதலனுடன் தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சகோதரியால் கைவிடப்பட்ட 14 வயது சிறுமி கொழும்பு மத்திய பேருந்து நிலையத்தில் அழுது கொண்டிருந்த போது பொலிஸார் அவரை மீட்டுள்ளனர்.
குறித்த சகோதரிகள் இருவரும் வெலிகம, இப்பாவல பகுதியில் உள்ள வறுமையான பிரதேசத்தில் வசிப்பவர்கள் என்றும், அவர்கள் வாழ்க்கையில் முதல் தடவையாக கடந்த 21 ஆம் திகதி கொழும்பு வந்ததாகவும் குறித்த சிறுமி பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.
குறித்த 23 வயதுடைய சகோதரி தனது தாயிடம் வெலிகமவிற்கு மருந்து வாங்குவற்கு செல்வதாக கூறி பணம் கேட்டு 14 வயது தங்கையுடன் வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வெலிகமவில் இருந்து குறித்த இருவரும் கொழும்பு – மாத்தறை பேருந்து ஒன்றில் கொழும்பிற்கு வந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கொழும்பு வந்தவுடன் சகோதரியின் தொலைபேசிக்கு காதலனிடம் இருந்து அழைப்பு வந்துள்ளது.
பின்னர் அவர் தனது 14 வயது சகோதரியை அழைத்து 1000 ரூபாயை கொடுத்துவிட்டு மாத்தறை பஸ்ஸில் வெலிகமவில் உள்ள தனது வீட்டிற்கு செல்லுமாறு கூறியதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனையடுத்து குறித்த சிறுமியை பொலிஸார் அரவது பெற்றோரிடம் ஒப்படைத்துள்ளனர்.