வடக்கு – கிழக்கில் உள்ள தமிழ் பாடசாலைகளுக்கு எதிர்வரும் (13.11.2023) ஆம் திகதி திங்கட்கிழமை விசேட விடுமுறை வழங்குமாறு வடமாகாணத் தமிழாசிரியர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
தீபாவளி பண்டிகை ஞாயிற்றுக்கிழமை(12.11.2023) கொண்டாடப்படுவதால், எதிர்வரும் (13) ஆம் திகதி திங்கட்கிழமை விடுமுறை வழங்குமாறு கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
இதற்கு முந்தைய வருடங்களிலும், விடுமுறை நாட்களில் தீபாவளி தினம் வருமேயானால் திங்கட்கிழமை பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டிருந்தது.
எனினும், இந்த வருடம் வடக்கு – கிழக்கு பாடசாலைகள் தொடர்பில் இவ்விடயத்தில் எவ்விதத் தீர்மானமும் எடுக்கப்படவில்லை.
இது மாணவர்களுக்கு இழைக்கப்படும் பெரும் அநீதியாகும் எனவும் வடமாகாண தமிழ் ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.
எனவே, இதனை கருத்திற் கொண்டு வடக்கு – கிழக்கு மாகாணங்களில் உள்ள தமிழ் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்குமாறு கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு எதிர்வரும் 13ஆம் திகதி திங்கட்கிழமை மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் உள்ள பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்கத்கது.