மேஷம்: மேஷராசிக்காரர்கள் இன்றைய நாளில் புதிய முயற்சிகள் எதையும் தொடங்க வேண்டாம். உங்களுடைய உடல் ஆரோக்கியத்தில் கொஞ்சம் கவனம் செலுத்த வேண்டும். தேவையற்ற செலவுகள் வருவதற்கு வாய்ப்பு உள்ளது. வேலை செய்யும் இடத்தில் மதிப்பும் மரியாதையும் உயரும். சொந்தத் தொழிலில் வாடிக்கையாளர்களை கொஞ்சம் அனுசரித்து செல்வது நல்லது.
ரிஷபம்:
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சந்தோஷமான நாளாகத்தான் இருக்க போகின்றது. நிலுவையில் இருந்த கடன்தொகை வசூலாகும். பணம் பையை நிரப்பும். வியாபாரத்தில் நல்ல லாபம் உண்டு. வேலை செய்யும் இடத்தில் நல்ல முன்னேற்றம் உண்டு. இன்றைய தினம் சந்தோஷத்திற்கு எந்த குறையும் இருக்காது.
மிதுனம்:
மிதுனராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் குழப்பமான நாளாகத்தான் இருக்க போகின்றது. எந்த ஒரு விஷயத்திலும் முடிவு எடுக்க முடியாமல் கொஞ்சம் தடுமாற்றம் இருக்கும். இருப்பினும் பெரியதாக பிரச்சினைகள் எதுவும் வருவதற்கு வாய்ப்பு இல்லை. முன்கோபம் இல்லாமல் நிதானத்தோடு செயல்பட்டால் நல்லது மட்டுமே நடக்கும்.
கடகம்: கடக ராசிக்காரர்கள் இன்றைய தினம் புதிய முயற்சிகளைத் தொடங்கலாம். தேவையற்ற மனபயத்தை நீக்கி, நம்பிக்கையோடு நீங்கள் செய்யும் எந்த ஒரு காரியமும் வெற்றியில் முடியும். வியாபாரத்தில் அவ்வப்போது சின்ன சின்ன பிரச்சனைகள் தலைதூக்க தான் செய்யும். வேலை செய்யும் இடத்தில் மேலதிகாரிகளை அனுசரித்துச் செல்லுங்கள்.
சிம்மம்:
சிம்மராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் வெற்றி தரும் நாளாக அமையப் போகின்றது. நீண்ட நாட்களாக முடிக்க முடியாமல் கிடப்பில் இருந்து வரும் எந்த வேலையாக இருந்தாலும் அதை இன்றைய நாள் உங்கள் கையில் எடுங்கள். நிச்சயமாக வெற்றி உங்கள் பக்கம்தான்.
கன்னி:
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் கொஞ்சம் பற்றாக்குறையான நாளாக இருக்கப்போகின்றது. செலவுகள் அதிகரிக்கும். வருமானம் குறையும். வீண் விரயம் ஏற்படும். கடன் வாங்க வேண்டிய சூழ்நிலையும் உண்டாகும். வேறு வழியே இல்லை சமாளித்து தான் ஆக வேண்டும். அதிக வட்டிக்கு மட்டும் கடன் வாங்காதீங்க
துலாம்: துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த நாள் யோகம் தரும் நாளாகத்தான் இருக்க போகின்றது. வேலை செய்யுமிடத்தில் பாராட்டுகள் குவியும். தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். குடும்பத்தில் கணவன் மனைவிக்கிடையே அன்னியோன்னியம் அதிகரிக்கும். எதிர்பாராத வரவு உங்களை மன மகிழ்ச்சி அடையச் செய்யும்.
விருச்சிகம்:
விருச்சிக ராசிக்காரர்கள் இன்று கொஞ்சம் பொறுமையாக இருக்க வேண்டும். எந்த விஷயத்திலும் அவசரப்பட வேண்டாம். முன் கோபப்பட வேண்டாம். பதறாத காரியம் சிதறாது என்ற வார்த்தையை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். இன்றைய நாள் நல்லபடியாக செல்லும்.
தனுசு: தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் கொஞ்சம் சோர்வான நாளாக இருக்கப் போகின்றது. எந்த ஒரு வேலையிலும் ஈடுபாடு இருக்காது. கொஞ்ச நேரம் ஓய்வு எடுத்துக் கொள்ளலாம் என்று மனசு சொல்லும். இருப்பினும் சோம்பேறித்தனத்தை விட்டுவிட்டு நீங்கள் செய்யக்கூடிய தினசரி வேலைகளை அன்றாட வேலைகளை உங்களுடைய கடமைகளை முடித்து விடுங்கள். அதுதான் உங்களுடைய வாழ்க்கைக்கு நல்லது.
மகரம்:
மகர ராசிக்காரர்கள் இன்றைய நாள் மிக மிக கவனமாக இருக்க வேண்டும். கொஞ்சம் அலட்சியமாக இருந்தாலும் ஏதாவது ஒரு பிரச்சனையில் மாட்டிக் கொள்வீர்கள். அனாவசியமாக யாரிடமும் வாக்குவாதத்தில் ஈடுபடவேண்டாம். யாருக்கும் வாக்கு கொடுக்காதீர்கள். முடிந்தால் இன்றைய நாள் மௌன விரதம் இருப்பது மிக மிக நல்லது. அதாவது அனாவசிய பேச்சை குறைத்துக் கொள்ளுங்கள்.
கும்பம்: கும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதிர்பாராத மகிழ்ச்சி ஒன்று காத்திருக்கிறது. அந்த மகிழ்ச்சி செய்தி தொலைபேசியின் மூலமாகவும் வரும். நண்பர்களின் மூலமாகவும் வரும். பணம் சம்பந்தப்பட்ட விஷயமாக இருக்கலாம் அல்லது வீட்டில் சுபகாரியம் சம்பந்தப்பட்ட விஷயம் ஆகவும் இருக்கலாம். ஆகமொத்தத்தில் உங்களுடைய மனது சந்தோஷமாக இருக்கும்.
மீனம்:
மீன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் கொஞ்சம் அலைச்சல் இருக்கும். நேரத்தோடு வேலைக்கு கிளம்புங்கள். சுறுசுறுப்பாக உங்களுடைய வேலையை முடித்து விடுங்கள். முடிந்தவரை நேரத்திற்கு ஆரோக்கியமான உணவை சாப்பிட்டு உடல் ஆரோக்கியத்தையும் கொஞ்சம் கவனித்து கொள்ளுங்கள். எந்த விஷயத்திலும் பதட்டம் வேண்டாம். பொறுமையாக இருந்தால் இந்த நாள் இனிய நாளே.