மேல் மாகாண பாடசாலைகளை அண்மித்த பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட விசேட போதைப்பொருள் சுற்றிவளைப்பில் 75 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
122 பாடசாலைகளை இலக்காக கொண்டு மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதன்போது, 02 கிலோகிராம் 148 கிராம் மாவா, 09 கிராம் 375 மில்லிகிராம் ஹெரோயின், 01 கிராம் 522 மில்லிகிராம் ஐஸ் மற்றும் 10 போதை மாத்திரைகள் பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டது.
மேல் மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபரின் பணிப்புரையின் பிரகாரம் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், மேல் மாகாணத்தில் உள்ள பாடசாலைகளை இலக்கு வைத்து சோதனைகள் தொடரும் என பொலிஸ் அவசர அழைப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.