மொரட்டுவை, உள்ள ஏகொட உயன பொலிஸ் வீதித் தடுப்பில் வைத்து பொலிஸாரிடம் மாட்டிவிடுவோம் என்ற பயத்தில் நான்கு ஹெரோய்ன் பக்கெட்டுகளை விழுங்க முயன்ற இராணுவ சார்ஜன்ட் ஒருவரை இன்று காலை கைது செய்யதுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
தனிமைப்படுத்தல் ஊடரங்கு உத்தரவை மீறி பயணிப்போரை கண்டறிவதற்கான சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, சந்தேக நபர் தான் பயணித்த முச்சக்கரவண்டியில் இருந்து இறங்கி வீதித் தடுப்பைத் தாண்டிச் செல்ல முயன்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேக நபரை பரிசோதித்தபோது, நான்கு ஹெரோய்ன் பக்கெட்டுகளை ஒரே நேரத்தில் விழுங்க முயன்றதாகவும் அந்த முயற்சியை தாம் முடியடித்ததாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் தொடங்கொட பகுதியில் உள்ள முகாமில் இணைக்கப்பட்டு சேவைபுரியும் அதிகாரி என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.