புகையிரத சாரதிகளின் தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக இன்று (24) காலை சேவையில் ஈடுபடவிருந்த 11 ரயில் சேவைகள் இரத்தாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன் காரணமாக ஏனைய ரயில் சேவைகள் தாமதமாகும் சாத்தியம் உள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், ரம்புக்கனைக்கும் கொழும்புக்கும் இடையிலான ரயில் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக வெயங்கொடை புகையிரத நிலையத்திற்கு அருகில் குறித்த ரயில் இடை நிறுத்தப்பட்டுள்ளதால் பிரதான ரயில் சேவைக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதேவேளை, புகையிரத சாரதிகள் பணி புறக்கணிப்பால் ஞாயிற்றுக்கிழமை (23) மாலை 6.40 மணிமுதல் இரவு 09 மணிவரையான காலப் பகுதிக்குள் மாத்திரம் 12 பயணிகள் புகையிரத சேவைகள் இரத்துச் செய்யப்பட்டிருந்தது.
ரயில் சாரதிகள் சேவையில் ஈடுபடுத்தப்படும் பிரச்சினையினை முன்னிறுத்தி ரயில் சாரதிகளால் இவ்வாறு தொழில் சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில், புகையிரத பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.