வத்தளை – ஏந்தேரமுல்லை பகுதியில் போதை மாத்திரைகளுடன் நபரொருவர் விசேட அதிரடிப்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். இதன்போது 40 வயதுடைய நபரொருவரே கைதுசெய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபரிடமிருந்து 1 இலட்சத்து 92 ஆயிரம் போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
இவ்வாறு கைப்பற்றப்பட்ட போதை மாத்திரைகளின் பெறுமதி 100 மில்லியன் ரூபாவென விசேட அதிரடிப்படையினர் தெரிவித்தனர்.