உலகின் மிகப் பழமையான நீர்வாழ் விலங்கு ஒன்று, 100 மில்லியன் ஆண்டுகள் பழமையான அம்பர் கல்லில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக, பல்லிகள், பூச்சிகள், சிலந்திகள் மற்றும் டைனோசர்களை சிக்க வைக்கும் புதைபடிவங்கள் பற்றிய அற்புதமான விவரங்களை பழங்கால ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
இந்நிலையில் தற்போது ஒரு 100 மில்லியன் ஆண்டுகள் பழமையான அம்பர் புதைப்படிவக் கல்லில் டைனோசர் காலத்தில் வாழ்ந்த ஒரு 5 மில்லிமீற்றர் நீளம் கொண்ட நண்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தின் பரிணாம உயிரியல் துறை ஆராய்ச்சியாளர் ஜேவியர் லூக்கின் (Javier Luque) கூற்றுப்படி, ”இந்த கண்கவர் படிமம் முற்றிலும் முழுமையாக உள்ளது, அதன் உடலில் ஒரு முடி கூட குறையாமல் அப்படியே உள்ளது என்றார்.
அதில் இருப்பது ஒரு சிவப்பு நண்டு என்றும் 125 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த அவ்வகை நண்டு இனங்கள் ‘அரை நீர்வாழ்’ வாழ்க்கை முறையைக் கொண்டிருந்ததாகவும் விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
அதாவது அது நிலத்திலோ அல்லது நீரிலோ வசிக்கவில்லை. அது வனப்பகுதியில் அல்லது நன்னீரில் வாழ்ந்துள்ளதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.
டைனோசர் காலத்தில், அது கடலில் இருந்து தரைக்கு மாறியது. கடல் அல்லாத நண்டுகள் 50 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு உருவானதாகவும் கூறப்படுகின்றது.
இதேவேளை , கடலில் இருந்து தரைக்கு இடம்பெயர்ந்த அந்த நண்டு இரண்டு மடங்கு தனித்துவமானது என்று கூறப்படுகிறது.