தொடர் கொலைகள் செய்த சீரியல் கொலைகாரனைப் பற்றி நிறைய கதைகள் கேள்விப்பட்டிருப்போம். ஆனால் பாகிஸ்தானில் ஒரு சீரியல் கொலையாளியின் கதை கொஞ்சம் வித்தியாசமானது.இந்த கொலைகாரன் 100க்கும் மேற்பட்ட குழந்தைகளைக் கொலை செய்திருக்கிறான். இதில் மிகப்பெரிய கொடுமை என்னவென்றால், இவன் தான் 100 குழந்தைகளைக் கொல்வேன் என சபதம் போட்டு கொன்றதோடு, 100 பேரை கொன்று முடித்ததும் பொலிஸில் சரணடைந்திருக்கிறான்.
இந்த கொலைகள் யாவும் 1999 ஆம் ஆண்டுக்கு முன்பு நடந்தவை. இந்த கொடூரமான கொலைகளைச் செய்தவனின் பெயர் ஜாவத் இக்பால். ஒரு நாள் லாகூரில் உள்ள ஒரு உருது செய்தித்தாளின் ஆசிரியர் ஒருவருக்கு ஒரு கடிதம் வந்தது.
அந்த கடிதத்தில் “என்னுடைய பெயர் ஜாவத் இக்பால், நான் 100 குழந்தைகளை கழுத்தை நெரித்து கொன்று, அவர்களின் உடலை அமிலத்தில் மூழ்கடித்தேன். நான் கொன்ற குழந்தைகள் எல்லோருமே வீட்டை விட்டு வெளியேறியவர்கள் மற்றும் அநாதைகள்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அத்துடன் எல்லா குழந்தைகளையும் கொன்ற இடத்தையும் அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளான்.
அதுமட்டுமின்றி, அந்த கொலையாளி போலீசாருக்கும் ஒரு கடிதத்தை அனுப்பியிருந்தான். ஆனால் போலீஸ் இந்த கடிதத்தை பெரிதாகக் கண்டு கொள்ளவில்லை. ஏதோ மர்மக் கடிதம் எனக் கைவிட்ட நிலையில் அந்த பத்திரிக்கையாளர் இந்த விஷயத்தில் மிகவும் தீவிரம் காட்டினார். தன்னுடைய ஜூனியர் பத்திரிகையாளர் ஒருவரை அந்த கடிதத்தில் குறிப்பிட்டிருந்த ஒரு இடத்துக்கு அனுப்பி வைத்தார்.
அங்கு சென்ற அந்த பத்திரிகையாளர் பெருமு் அதிர்ச்சிக்குள்ளானார். அங்கிருந்த ஒரு வீடு ரத்த வெள்ளத்தில் இருந்தது. உள்ளுக்குள் ஒரு பெரிய பையில் குழந்தைகளுடைய உடைகள் மற்றும் காலணிகள் இருந்தன. அதோடு அங்கு ஒரு டைரியும் இருந்தது. அந்த டைரியில் இறந்து போன குழந்தைகளைப் பற்றிய தகவல்கள் எழுதப்பட்டிருந்தன.
ஜாவேத் இக்பால் தனது கடிதத்தில் அவர் எல்லா குழந்தைகளையும் கொன்ற இடத்தையும் குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில் தனது குற்றத்தை ஒப்புக்கொண்ட ஜாவேத், லாகூர் போலீசாருக்கும் ஒரு கடிதம் அனுப்பினார்.
இருப்பினும், ஜாவேத்தின் கடிதத்தை போலீசார் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. ஆனால் செய்தித்தாளின் ஆசிரியர் இந்த விஷயத்தை தீவிரமாக எடுத்துக் கொண்டு தனது பத்திரிகையாளர்களில் ஒருவரை கடிதத்தில் குறிப்பிட்டுள்ள இடத்திற்கு அனுப்பினார்.
அந்த இடத்தை அடைந்ததும், பத்திரிகையாளர் ஒரு வீட்டினுள் ரத்த ஓட்டத்தைக் கண்டார். இது மட்டுமல்லாமல், இரண்டு பெரிய பைகளில் குழந்தைகள் காலணிகள் மற்றும் உடைகள் இருந்தன. அதோடு இரண்டு பெரிய கலன்களில் ஹைட்ரோ குளோரிக் அமிலமும் அதில் குழந்தைகளின் எலும்புகளும் மூழ்கியிருந்தன.
அதிர்ந்துபோன பத்திரிகையாளர் உடனே அலுவலகம் சென்று ஆசிரியரிடம் விஷயத்தைச் சொல்ல, போலீசாருக்கும் தகவல் சொல்லப்பட்டது.
பொலிசாரும் அங்கு வந்து பார்த்து அங்கிருந்த டைரியைக் கைப்பற்றினர். அதில் “நான் ஆதாரமாக சில சடலங்களை விட்டுவிட்டேன். அவற்றை இப்போது என்னாலும் கண்டுபிடிக்க முடியவில்லை. ஆனால் நான் ரவி ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொள்ளப்போகிறேன்” என்று எழுதியிருந்தான் அந்த கொடூர கொலையாளி.
இதனையடுத்து சாரும் ரவி ஆற்றில் தேதல் குழு கொண்டு தேடினர். ஆனால் கொலையாளியின் உடல் கண்டுபிடிக்கப் படவில்லை.
அதன்பின்னர், ஜாவத்தின் இரு கூட்டாளிகளை கைது செய்து அவர்களிடம் விசாரிக்கத் தொடங்கினர். விசாரணையின் போது, அவர்களில் ஒருவர் மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
இதற்கெல்லாம் இடையே, ஜாவேத் இக்பால் அதே உருது செய்தித்தாளின் அலுவலகத்தில், முன்பு அவர் கடிதத்தை அனுப்பியிருந்தார். அவர் ஆசிரியரைச் சந்தித்து நேர்காணல் செய்யச் சொன்னார், அவர் சரணடைய வந்ததாகக் கூறினார். அவரது நேர்காணல் முடிந்ததும், பொலிசார் அவரை கைது செய்தனர்.
ஜாவத் எல்லா குற்றங்களையும் ஒப்புக் கொண்டதால் 2000- ஆம் ஆண்டு மார்ச் மாதம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதாகவும் கூறப்படுகின்றது.
இந்த சம்பவம் இடம்பெற்று பல ஆண்டுகள் ஆனபோதும் இன்றும் அந்த கொலைகாரனின் கொடூர செயல் பலரையும் பதறவைக்கின்றது.