நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து லங்கா சதொச விற்பனை நிலையங்களிலும் 10 அத்தியாவசிய நுகர்வுப் பொருட்களின் விலைகளை குறைப்பதற்கு சதொச நிறுவனம் தீர்மானித்துள்ளது.
அதனடிப்படையில், டின் மீன் ஒன்று 75 ரூபாவினால் குறைக்கப்பட்டு 500 ஆக விற்பனை செய்யப்படுகின்றது. ஒரு கிலோ காய்ந்த மிளகாய் 5 ரூபாவினால் குறைக்கப்பட்டு 780 ரூபாவாக விற்பனை செய்யப்படுகின்றது.
ஒரு கிலோ பாசிப்பயறு 25 ரூபாவினால் குறைக்கப்பட்டு 890 ரூபாவாக விற்பனை செய்யப்படுகின்றது. ஒரு கிலோ வெங்காயம் 20 ரூபாவினால் குறைக்கப்பட்டு 470 ரூபாவாக விற்பனை செய்யப்படுகின்றது.
ஒரு கிலோ நெத்தலி 15 ரூபாவினால் குறைக்கப்பட்டு 925 ரூபாவாக விற்பனை செய்யப்படுகின்றது. ஒரு கிலோ கடலை 2 ரூபாவினால் குறைக்கப்பட்டு 439 ரூபாவாக விற்பனை செய்யப்படுகின்றது.
ஒரு கிலோ சம்பா அரிசி 4 ரூபாவினால் குறைக்கப்பட்டு 226 ரூபாவாக விற்பனை செய்யப்படுகின்றது. ஒரு கிலோ வெள்ளை சீனி 5 ரூபாவினால் குறைக்கப்பட்டு 242 ரூபாவாக விற்பனை செய்யப்படுகின்றது.